ஜெருசலம்: இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு (படம்) மீண்டும் வாகை சூடுவார் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன. நீண்டகாலமாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நெட்டன்யாகுவின் லைக்குட் கட்சியும் அதனை ஆதரிக்கும் கட்சிகளும் மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 60ஐக் கைப்பற்றும் என இஸ்ரேலின் மூன்று முக்கிய தொலைக்காட்சிகள் தெரிவித்தன. சேனல் 13 என்னும் தொலைக்காட்சி நெட்டன்யாகு தரப்புக்கு 59 இடங்கள் கிடைக்கும் என்றது. தனிப்பெரும்பான்மைக்கு ஒன்றிரண்டு இடங்கள் தேவைப்படலாம் என்றும் அது அவர் ஆட்சியமைக்கும் முயற்சியைப் பாதிக்காது என்றும் அது கூறியது.
நெட்டன்யாகு வெல்வார்: கணிப்பு
1 mins read
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு (படம்) மீண்டும் வாகை சூடுவார் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன. படம்: ஏஎப்பி -

