கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று புதிதாக எழுவருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் இத்தனை பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதன்முறை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து, அந்நாட்டில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 22 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.
ஜனவரி 25ஆம் தேதி மலேசியாவில் முதல் கிருமித்தொற்று சம்பவம் பதிவானது.

