'அன்வார் பிரதமராகியிருக்கக்கூடும்; ஆனால், மக்களுக்கு துரோகம் இழைக்க அவர் விரும்பவில்லை'

'அன்வார் பிரதமராகியிருக்கக்கூடும்; ஆனால், மக்களுக்கு துரோகம் இழைக்க அவர் விரும்பவில்லை'

1 mins read
a3987180-4944-4877-9a88-83fdf98aa7c5
அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை பிரதமர் பதவியில் அமர்த்த அம்னோ சூழ்ச்சி செய்ததாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. படம்: ஏஎஃப்பி -

அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை பிரதமர் பதவியில் அமர்த்த அம்னோ சூழ்ச்சி செய்ததாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த சூழ்ச்சிக்கு உடன்பட்டிருந்தால் இந்நேரம் அன்வார் பிரதமர் ஆகியிருப்பார் என செத்தியவங்சா நாடாளுமன்றத் தொகுதி பிகேஆர் உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமது தெரிவித்து உள்ளார். "பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை விட்டு வெளியேறி ஊழல் வழக்குகளை எதிர்நோக்கும் அம்னோ தலைவர்களுடன் புதிய கூட்டணி ஏற்படுத்தினால் பிரதமர் பதவியை தமக்கு விட்டுத்தருவதாகக் கூறி தம்மிடம் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டதாக திரு அன்வார் எங்களிடம் கூறினார்.

"ஆயினும் பதவிக்காக தம்மை ஆதரித்த மக்களுக்குத் துரோகம் செய்ய விரும்பவில்லை என்று பிரதமர் பதவியை ஏற்க திரு அன்வார் மறுத்துவிட்டார்," என நிக் அகமது தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த வாரம் எழும்பிய அரசியல் குழப்பம் துரதிருஷ்டவசமானது என்றாலும்கூட துரோகத்தையும் விசுவாசத்தையும் அடையாளம் காண அக்குழப்பம் உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#மலேசியா #அரசியல் #அன்வார் #பிரதமர் #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்