கொரோனா: சீனாவில் நிலைமை மேம்படுகிறது

கொரோனா: சீனாவில் நிலைமை மேம்படுகிறது

2 mins read

சீனாவில் நிலைமை மேம்படுகிறது

பெய்ஜிங்: சீனாவில் புதிய கிருமி தொற்றுச் சம்பவங்கள் 3வது நாளாக குறைந்துள்ளன. நேற்று 119 புதிய சம்ப வங்கள் ஏற்பட்டன. இது, முந்தைய நாளில் பாதிக்கப்பட்ட 125 பேருடன் ஒப்பிடுகையில் சற்றுக்குறைவு

வூஹானில் மருத்துவர் மரணம்

வூஹான்: சீனாவின் ஹுபே மாநிலத்தில் உள்ள மத்திய வூஹான் மருத்துவமனையில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மெய் ஷோங்மிங் என்பவர் இறந்துவிட்டார். நோயாளிக்கு சிகிச்சை அளித்தபோது அவருக்கும் கிருமி தொற்றி விட்டது என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

அமேசான் ஊழியர் கிருமியால் பாதிப்பு

வாஷிங்டன்: முதல் முறையாக கொரோனா கிருமியால் தனது ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் நேற்று கூறியது. பிப்ரவரி 25ஆம் தேதி அந்த ஊழியருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால் வீடு திரும்பிவிட்டார். சியாட்டலில் உள்ள சவுத் லேக்கில் உள்ள அலுவலகத்தில் அவருடன் வேலை பார்த்த அனைவருக்கும் பாதிக்கப்பட்ட நபர் குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும் நிர்வாகம் சொன்னது. இதற்கு முன்பு இத்தாலியில் இரண்டு அமேசான் ஊழியர்கள் கிருமியால் பாதிக்கப்பட்டனர்.

ஒரு மில்லியன் முகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய ஜாக் மா

ஹாங்ஷோவ்: கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு உலகப் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, ஒரு மில்லியன் முகக் கவசங்களை தானமாக வழங்கியுள்ளார். இருபது நாட்களுக்கு முன்பு கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு தாராள மனதுடன் உதவி செய்த ஜப்பானுக்கு கைமாறாக இந்த உதவி செய்யப்படுவதாக திரு மா கூறியுள்ளார். ஜப்பானில் உள்ள பல்வேறு அமைப்புகள் 125,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உடைகளை திரட்டி சீனாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைத்தது.

தாய்லாந்து புதிய கட்டுப்பாடு

பேங்காக்: சிங்கப்பூர் உட்பட கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளும் நாடு திரும்புவோரும் இரண்டு வாரங்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தாய்லாந்து அரசாங்கம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் சிங்கப்பூரில் உள்ள தாய்லாந்து தூதரகம், தாய்லாந்து வரும் ஆேராக்கியமான சிங்கப்பூரர்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று விளக்கியுள்ளது.

ஈரானில் 54,000 கைதிகள் விடுவிப்பு

ெடஹ்ரான்: ஈரானில் கொரோனா கிருமி மேலும் பரவாமல் இருக்க நெரிசலான சிறைகளிலிருந்து 54,000 கைதிகளை தற்காலிகமாக விடுவித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் ஈரானில் கிருமி தொற்றியதால் 77 பேர் பலியாகிவிட்டனர்.

ஃபுகுஷிமாவில் வெளியேற்ற உத்தரவை மீட்ட ஜப்பான்

தோக்கியோ: சுனாமியால் ஃபுகுஷிமா அணுசக்தி நிலையம் சேதமடைந்தது. இதனால் ஃபுடாபா உட்பட இரு நகரங்களில் வெளியேற்ற உத்தரவு பிறபிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக கொண்டு செல்லப்பட இருப்பதால் ஃபுடாபா நகரில் உள்ள வெளியேற்ற உத்தரவை அரசாங்கம் தற்காலிகமாக மீட்டுக் கொண்டுள்ளது.