ஈரான், இத்தாலி, தென்கொரியா போன்ற நாடுகளின், கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நகரங்களில் கடந்த 14 நாட்கள் வரை இருந்தோர் இந்தோனீசியாவுக்குள் நுழையவோ அல்லது அந்த நாடு வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நாடுகளின் மற்ற பகுதிகளிலிருந்து வருவோர், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர் அளிக்கும் சான்றிதழை வழங்கினால் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என இந்தோனீசிய சுகாதார அமைச்ச ரெட்னோ மார்சுடி கூறினார்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கும் இத்தகைய தடையை அந்த நாடு விதித்திருந்தது.
கிருமித்தொற்று பரவிய பகுதிகளிலிருந்து தாயகம் திரும்பும் இந்தோனீசியர்கள் கூடுதல் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று கூறப்பட்டது.
மக்கள்தொகையைப் பொறுத்தவரை உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தோனீசியாவில் (260 மில்லியன் மக்கள்) இதுவரை இருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
#கொரோனா #கொவிட்-19 #இந்தோனீசியா

