லண்டன்: இந்தோனீசிய ராணுவத்தின் ஆதரவில் நடத்தப்படும் அரசாங்க சார்பு இணையச்செய்தித் தளங்களுடன் தொடர்புடைய 80க்கு மேற்பட்ட ஃபேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 60க்கு மேற்பட்ட கணக்குகள் போலியான பெயர்களைக் கொண்டவை என்பது விசாரணையில் தெரியவருகிறது.
இந்தோனீசியாவின் பாப்புவா
வட்டாரத்தில் வாழும் மக்களிடையே அரசாங்க சார்பு இணையத் தளங்களில் உள்ள செய்திகளைப் பரப்புவதற்கு ஃபேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்ததை அடுத்து அந்தக் கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

