பிரேசில்: கனமழை, வெள்ளத்திற்கு 21 பேர் பலி

1 mins read
80319b72-6434-441b-9260-6cf9f376982e
பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாவ் பாலோ, டி ஜெனிரோ ஆகிய வட்டாரங்களில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலியாகினர். படம்: நியூஸ்ட்ரேக்லைஃவ் -

சாவ் பாலோ: பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாவ் பாலோ, டி ஜெனிரோ ஆகிய வட்டாரங்களில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலியாகினர். 32 பேரைக் காணவில்லை. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஒரு மாதத்திற்குப் பெய்யக்கூடிய மழை ஒட்டுமொத்தமாக ஓரிரண்டு நாட்களில் பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சாவ் பாலோ, மற்றும் ரியோ டி ஜெனிரோவின் புறநகர்ப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சாவ் பாலோ மாநிலத்தில் நேற்று முன்தினம் மட்டும் 16 பேர் மாண்டனர். சாண்டோஸ், வாவ் விசென்டி மற்றும் குவாருஜ் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பெருவிரைவுச் சாலைகளின் ஓரங்களில் நின்றிருந்த மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்து கிடப்பதால் சாலைப்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.