மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவர் பதவியிலிருந்து தான் விலகியதை உறுதிபடுத்தினார் திருவாட்டி லத்தீஃபா கோயா.
லத்தீஃபா, 46, தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் முகைதீன் யாசினிடம் கடந்த திங்கட்கிழமை சமர்ப்பித்ததாக இன்று (மார்ச் 6) ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
"இது எனது சொந்த முடிவு. நான் பதவி விலக அழுத்தம் கொடுக்கபட்டது என்ற யூகங்கள் ஆதாரமற்றவை.
"நான் பிரதமரைச் சந்தித்துப் பேசினேன், அவர் எனது நிலையை புரிந்து கொண்டார்.
"1எம்டிபி நிதியை வெளிநாட்டிலிருந்து மீட்டெடுப்பதற்கான எம்ஏசிசியின் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் விளக்கமளித்தேன். அந்நடவடிக்கைகளுக்கு அவர் முற்றிலும் ஆதரவு தெரிவித்தார் என திருவாட்டி லத்தீஃபா கூறினார்.
#மலேசியா #எம்ஏசிசி #லத்தீஃபா கோயா

