கட்சி தாவல்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம்

கட்சி தாவல்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம்

1 mins read
f35b5af5-3df6-4a1e-87af-894773ebff5a
கட்சி தாவியவர்களிடம் இருந்து 10 மில்லியன் ரிங்கிட் (S$3.3 மில்லியன்) அபராதம் வசூலிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக பிகேஆர் கட்சியின் தலைமைப் பொருளாளர் லீ சென் சுங் கூறியுள்ளார். படம்: மலேசியகினி -

புத்ராஜெயா: கட்சி தாவியவர்களிடம் இருந்து 10 மில்லியன் ரிங்கிட் (S$3.3 மில்லியன்) அபராதம் வசூலிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக பிகேஆர் கட்சி தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் அவர்கள் கையெழுத்திட்ட சட்ட ஆவணங் களின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என் றார் அக்கட்சியின் செயலாளர் சைஃபுதின் இஸ்மாயில்.

அடுத்த வாரத்தில் இது தொடர்பான வழக்கு ஆவணங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் கட்சிப் பொருளாளர் லீ சென் சுங்.

ஆனால் மலேசிய தேர்தல் சட்டம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை அனுமதிப்பதால், இது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெளிவாக தெரியவில்லை.

பிகேஆர் கட்சியின் அஸ் மின் அலி உள்ளிட்ட 11 பேர் இரு வாரங்களுக்கு முன் அக் கட்சியிலிருந்து விலகி, சுயேச்சையாக செயல்படப் போவதாக அறிவித்தனர்.