ஈரான் அமைச்சரின் ஆலோசகர் பலி

ஈரான் அமைச்சரின் ஆலோசகர் பலி

1 mins read
4b7a174d-04b6-4087-8d6d-e2a579ffd7d8
ஈரானில் இருந்து ஈராக்கின் நஜாப் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள். படம்: ஏஎப்பி -

தெஹ்ரான்: ஈரான் வெளியுறவு அமைச்சரின் ஆலோசகர் ஒருவரும் கொரோனா கிருமியால் மாண்டுவிட்டார். ஹுசைன் ஷேக்குலிஸ்லாம் எனப்படும் அவர் வியாழக்கிழமை உயிரிழந்ததாக 'ஈர்னா' அரசு ஊடகம் கூறியுள்ளது. ஈரானில் கொரோனா கிருமித்தொற்று மரணம் 107க்கு அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு உள்நாட்டுப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஈரானில் உள்ள பெரிய நகரங்களுக்கு இடையிலான பயணப் போக்குவரத்தைக் குறைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதம் வரை பள்ளிகள் மூடப்படுவதால் அதனை பயணத்திற்கான வாய்ப்பாக மக்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் பணத் தாட்களைக் கையால் தொடுவதைத் தவிர்க்குமாறும் ஈரானிய சுகாதார அமைச்சர் சயீது நமாக்கி கேட்டுக்கொண்டுள்ளார். "மக்கள் ரொக்கப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வங்கி நோட்டுகளும் காசுகளும்கூட கிருமியைப் பரப்பும் அபாயம் கொண்டவை," என்று திரு நயீது செய்தியாளர்களிடம் கூறினார்.