கொவிட்-19 தாக்கம்: மலிண்டோ ஏர் ஊழியர்களின் சம்பளம் பாதியாகக் குறைப்பு

கொவிட்-19 தாக்கம்: மலிண்டோ ஏர் ஊழியர்களின் சம்பளம் பாதியாகக் குறைப்பு

1 mins read
8bf86c6d-3572-4efe-9e45-e884295b7208
இரு வாரங்களுக்கு சம்பளமில்லா விடுப்பில் செல்ல ஊழியர்களை மலிண்டோ ஏர் பணித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. படம்: மலிண்டோ ஏர் -

கொரோனா கிருமித்தொற்று காரணமாக விமானச் சேவைகள் குறைந்துள்ளன. இதனால் விமானச் சேவைகளின் வருமானத்தில் சரிவு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலேசியாவின் மலிண்டோ ஏர் விமானச் சேவை அதன் ஊழியர்களின் சம்பளத்தை பாதியாகக் குறைத்துள்ளது.

அதுமட்டுமல்லாது, இரு வாரங்களுக்கு சம்பளமில்லா விடுப்பில் செல்ல ஊழியர்களை மலிண்டோ ஏர் பணித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருமானச் சரிவை எதிர்கொள்ள மலிண்டோ ஏர் விமானச் சேவை பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி முசாஃபிஸ் முஸ்தஃபா பக்ரி நேற்று (மார்ச் 6) தெரிவித்தார்.

விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், விநியோகிப்பாளர்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஒத்திவைப்பது குறித்து விண்ணப்பித்தல், சம்பளமில்லா விடுப்பில் செல்ல ஊழியர்களைப் பணித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

#மலிண்டோ ஏர் #கொவிட்19 #சம்பளக் குறைப்பு #சம்பளமில்லா விடுப்பு

குறிப்புச் சொற்கள்