WHO: கோடை காலத்தில் கொரோனா கிருமி மறைவதற்கான ஆதாரம் இல்லை

1 mins read
11b4adfc-3f0d-43d0-a055-7f2a3a0e623d
"வெவ்வேறு பருவநிலைகளில் இந்தக் கிருமி எவ்வாறு செயல்படும் என்று கூறமுடியாது," என்று தனது தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அவசரநிலைப் பிரிவின் இயக்குநரான டாக்டர் மைக்கல் ரயன் கூறியுள்ளார். படம்: ஏஎஃப்பி -

உலகின் பல நாடுகளில் அசுர வேகத்தில் பெருகிவரும் கொரோனா கிருமித்தொற்றை எதிர்த்துப் போரிடுவதில் உலக நாடுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அறுவுறுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்தக் கிருமி வரும் கோடை காலத்தில் மறைந்துவிடும் என்று கூறுவதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது.

"வெவ்வேறு பருவநிலைகளில் இந்தக் கிருமி எவ்வாறு செயல்படும் என்று கூறமுடியாது," என்று தனது தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அவசரநிலைப் பிரிவின் இயக்குநரான டாக்டர் மைக்கல் ரயன் கூறியுள்ளார்.

அத்துடன், வரும் கோடை காலத்தில் இந்தக் கிருமி மற்ற சளிக்காய்ச்சல் கிருமிகளைப்போல், தானே மறைந்துவிடும் என அசட்டையாக இருக்க வேண்டாம் என நாடுகளை அவர் எச்சரித்தார்.

"இந்தக் கிருமி தொடர்ந்து பரவும் சக்தியை பெற்றுள்ளது என்ற எண்ணி செயல்பட வேண்டும்," என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

#WHO #கொரோனா #கோடை #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்