இத்தாலியில் மேலும் 49 பேர் மரணம்

1 mins read

ரோம்: கொரோனா கிருமித்தொற்று காரணமாக இத்தாலியில் மேலும் 49 பேர் மாண்டனர். இதன் மூலம் மாண்டோர் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் 4,636 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த வியாழனன்று 351லிருந்து 462க்கு அதிகரித்தது.