வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். வாஷிங்டன், கலிஃபோர்னியா ஆகிய மேற்குக் கரை மாநிலங்களுக்கு வெளியே அமெரிக்காவில் முதல்முறையாக கொரோனா கிருமித்தொற்று காரணமாக மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மாண்ட இருவரும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருந்ததாக ஃபுளோரிடா சுகாதார ஆணையம் தெரிவித்தது. ஃபுளோரிடா மாநிலத்தில் மொத்தம் 12 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
ஃபுளோரிடாவில் இறந்த இருவரையும் சேர்த்து அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மொத்தம் 16 பேர் உயிரிழந்திருப்பதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா கிருமித்தொற்று ஆய்வு மையம் தெரிவித்தது.
அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

