தெஹ்ரான்: கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று மரணம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.
தலைநகர் தெஹ்ரானைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி ஃபாத்திமே ரஹ்பர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
நேற்று முன்தின நிலவரப்படி கிருமித்தொற்று காரணமாக ஈரானில் 124 பேர் மாண்டதாக ஈரானிய அரசாங்கம் அறிவித்தது.
ஈரானின் சுகாதாரத் துணை அமைச்சரும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

