லெஸ்போஸ் தீவு: அகதிகள் தனது எல்லைக்குள் நுழை
வது தொடர்பாக கிரீஸ் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்த நிலையில் லெஸ்போஸ் தீவில் உள்ள அகதிகள் தங்குமிடத் தில் தீ விபத்து ஏற்பட்டது.
அகதிகளுக்கான குடும்பப் பராமரிப்பு மையமான 'ஒன் ஹேப்பி ஃபேமிலி' பகுதியில் இச்சம்பவம் நடந்தது.
முன்னதாக உதவி குழுக் கள், லெஸ்போஸில் செய்தி
யாளர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
"பள்ளிக் கட்டடம் நிறைய சேதம் அடைந்துள்ளது. இந்த நேரத்தில் நாங்கள் வேறு எதுவும் சொல்ல முடியாது," என்று பெயர் வெளியிட விரும் பாத ஒருவர் ஏஎஃப்பியிடம் கூறினார். இதற்கிடையே, கஸ்தானீஸ் எல்லைப்பகுதியில் அகதிகள் தப்பிச் செல்வதற்கு ஏதுவாக, துருக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருவ
தாக கிரீஸ் தெரிவித்துள்ளது.

