சோல்: கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்கொரியாவின் மேயர் ஒருவர்.
கொரிய நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையங்கள் நேற்று 272 புதிய கிருமித்தொற்று சம்பவங்களையும் இருவர் பலியானதையும் உறுதிப்படுத்தியது.
புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முந்திய நாட்களைவிட குறைவாக இருந்தது. இருப்பினும் அதிகமான சோதனைகள் செயல்படுத்தப்படுவதால் எண்ணிக்கைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,313 எனவும் பலியானவர்களின் எண்ணிக்கை 50ஆகவும் உள்ளது.
தென்கொரியாவின் உறுதிப்
படுத்தப்பட்ட சம்பவங்களில் கிட்டத்தட்ட 75 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ள டேகு நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேயர் குவான் யங்-ஜின், பிப்ரவரி 29ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக புதிய சம்பவங்களின் எண்ணிக்கை 300க்கும் கீழ் குறைந்துள்ளது என்று அவர் கூறியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

