மலேசியா: புதிதாக அறுவருக்கு கிருமித்தொற்று

மலேசியா: புதிதாக அறுவருக்கு கிருமித்தொற்று

1 mins read
1bc133bb-a463-4c5f-a040-8ff772664676
-

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் நேற்று பதிவான ஆறு புதிய கிருமித் தொற்று சம்பவங்களையடுத்து மொத்த எண்ணிக்கை 99ஐ எட்டியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஆறு சம்பவங்களும் 26வது நோயாளி சம்பந்தப்பட்ட பகுதியுடன் நெருங்கிய தொடர்புள்ளவை என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

"தொடர்புத் தடமறிதல் மூலம் இந்தப் புதிய சம்பவங்கள் அனைத்தையும் அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்," என்று அவர் கூறினார்.

மலேசியாவில் மொத்தமுள்ள 99 கொவிட்-19 கிருமி சம்பவங்களில் இரண்டு நோயாளிகள் சுவாசப் பிரச்சினை காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியதாகவும் அவர் சொன்னார்.

இதற்கிடையே, வூஹான் நகரில் இருக்கும் சுமார் 20,000 மலேசியர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கான எந்த திட்டமும் மலேசிய அரசாங்கத்திடம் இல்லை என்று சீனாவுக்கான மலேசிய தூதர் நுஷீர்வான் ஜைனல் அபிடின் தெரிவித்தார். "சீனாவில் உள்ளவர்களிட

மிருந்து தங்களை அழைத்துச் செல்லுமாறு எந்த கோரிக்கையும் வரவில்லை," என்று அவர் சொன்னார்.