சொகுசுக் கப்பலில் 45 பேருக்கு பாதிப்பு

சொகுசுக் கப்பலில் 45 பேருக்கு பாதிப்பு

1 mins read
b378c2b8-be85-4455-91b5-96408a23b3cf
படம்: ஏஎப்பி -

லக்சோர்: எகிப்தின் தெற்கு நகரமான லக்சோரில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் 45 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து 171 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக எகிப்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இதே கப்பலில் இருந்த ஒரு தைவான்-அமெரிக்கப் பெண் சுற்றுலாப் பயணி தைவானுக்குத் திரும்பியபோது அவருக்கு கிருமித் தொற்று இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதால் கப்பலில் உள்ள அனைவரிடமும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.