கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பிடித்தால் உடல்நிலை மோசமாகும்: நியூயார்க் மேயர்

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பிடித்தால் உடல்நிலை மோசமாகும்: நியூயார்க் மேயர்

1 mins read

சிகரெட் அல்லது மின் சிகரெட்டுகளை புகைப்பிடிப்பதால் கொரோனா கிருமியால் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று நியூயார்க் நகர மேயர் பில் டி பிலசியோ தெரிவித் துள்ளார். அந்நகரில் மட்டும் இதுவரை 13 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் கூட்டத்தில் நேற்று பேசிய திரு டி பிலசியோ, புகைப்பிடிக்கும் பழக்கம் உடையோர் கிருமித்தொற்றால் அதிக அபாயத்தை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டார். புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட உதவி நாடவும் அவர் நியூயார்க் மக்களை ஊக்குவித்தா ர்.

"பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தோருடன் தொடர்பு இல்லாதவர்களும் இந்நோயால் தொடர்ந்து பாதிப்படைவதை நாங்கள் காண்கிறோம். எனவே, கிருமி பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நியூயார்க் மக்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார். அடுத்த இரண்டு வாரங்களில் கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 100 வரை கூடலாம் என எச்சரித்துள்ள அவர், பொது இடங்களில் கூட்டங்களைத் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் .

இதற்கிடையே, வாஷிங்டன் நகரிலும் கொரோனா கிருமி பரவி வருவது குறித்து கவலைப்படவில்லை என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்நகருக்கு அருகில் திரு டிரம்ப் பங்கேற்ற மாநாடு ஒன்றில் ஆடவர் ஒருவருக்கு கிரு மித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டபோதும், தொடர்ந்து மக்களைத் தாம் சந்திக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.