ரயில் பயணி மீது வாசனை திரவியத்தைத் தெளித்த ஆடவர்

ரயில் பயணி மீது வாசனை திரவியத்தைத் தெளித்த ஆடவர்

2 mins read
4aa35fe5-5b01-409e-a545-7d2dbed18f34
-

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்றில், ஆசியாவைச் சேர்ந்த ஒரு பயணி மீது மற்றொரு பயணி வாசனை திரவியத்தைத் தெளிப்பதைக் காட்டும் ஒரு காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த ஆசிய ஆடவர் தனக்கு அருகில் நின்றுகொண்டிருந்ததால், ஆப்பிரிக்க அமெரிக்கரான மற்றோர் ஆடவர் கூச்சலிட்டு தீய சொற்களால் அவரைத் திட்டியதை, டோரிஸ் ஆவ் என்பவர் பதிவேற்றம் செய்த அந்தக் காணொளி காட்டுகிறது.

ரயில் கதவின்மீது அந்த ஆசிய ஆடவர் சாய்ந்த நிலையில் அமைதியாக நின்றிருந்தபோது, பயணி கள் அதிகம் இல்லாத அந்த ரயிலில் அந்தக் கறுப்பின ஆடவர் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார். அந்த ரயில் இருந்த மற்றொரு பயணிடம் சென்று, "அவனை விலகியிருக்க சொல்," எனக் கோபமாகக் கூச்சலிட்டார் அந்த கறுப்பினத்தவர். அந்த ஆசிய ஆடவர் ஏன் விலகவேண்டும் என்று அந்தப் பயணி கேட்டதற்கு, "அதோ, என் பக்கத்தில் அவன் இருக்கிறானே" என்று அந்தக் கறுப்பின ஆடவர் கோபத்து டன் கூறி, தீயச் சொல்லில் அவரைத் திட்டினார்.

இதனை அந்த ஆசிய ஆடவர் முற்றிலு ம் கண்டுகொள்ளாததால் மேலும் ஆத்திரமடைந்த அந்தக் கறுப்பின ஆடவர், நீல நிற வாசனை திரவியம் ஒன்றைக் கையில் எடுத் து அந்த ஆசியர் மீது தெளித்தார்.

"பக்கத்தில் நான் ஏன் அமரக்கூடாது?" என்று அந்த ஆசிய ஆடவர் தட்டிக்கேட்க, அங்கிருந்த ஒரு பெண் அவரை அழைத்துச் சென்றதை மற்றொறு காணொளி காட்டுகிறது.

கொரோனா கிருமிப் பரவலின் தொடர்பில் உலகெங்கும் நடக்கும் இனவாதச் சம்பவங்களில், நியூயார்க்கில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் ஆக அண்மைய சம்பவம். கடந்த மாதம் 24ஆம் தேதி பிரிட்டனில் நிகழ்ந்த இத்தகைய ஒரு சம்பவத்தில், 23 வயது சிங்கப்பூரர் ஜானத்தன் மொக் நான்கு ஆடவர்களால் தாக்கப்பட்டார். வியட்னாமைச் சேர்ந்த ஓர் ஓவியர், கிருமிப் பரவலின் காரணமாக கலைக்கூடத்திற்குள் நுழைய மறுக்கப்பட்ட செய்தி மார்ச் 5ஆம் தேதி வெளிவந்தது.