ஏவுகணைகளைப் பாய்ச்சிய வடகொரியா

ஏவுகணைகளைப் பாய்ச்சிய வடகொரியா

1 mins read

பியோங்யாங்: அணுவாயுதம் வைத்திருக்கும் வடகொரியா நேற்று ஏவுகணைகளைப் பாய்ச்சி சோதனை நடத்தியதாக ஜப்பான் குறைகூறியிருக்கிறது.

அணுவாயுதம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை முடங்கியதை அடுத்து வடகொரியா அதன் ஆயுதங்களை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓராண்டு முன்பு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் வியட்னாம் தலைநகர் ஹனோயில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை. மேலும் பேச்சு வார்த்தை அத்துடன் முடங்கியது.

இந்நிலையில், வடகொரியா பல்வேறு ஏவுகணைகளைப் பாச்சியதாக தென்கொரியாவின் ராணுவத் தலைவர் நேற்று கூறினார்.

வடகொரியாவின் இந்தச் செயல் வருத்தமளிப்பதாகக் கூறி அவர் தமது அதிருப்தியைத் தெரிவித்துக்கொண்டார். வடகொரியா மூன்று ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக தென்கொரிய அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். பிறகு பல ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக அவர்கள் கூறினர்.