ஈப்போ: ஜோகூர், மலாக்கா ஆகிய மாநிலங்களைப் போல பேராக் மாநிலமும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் கைகளை விட்டுச் சென்றுள்ளது.
பேராக் மாநிலத்தில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் மலேசியாவின் புதிய பிரதமர் முகைதீன் யாசினின் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்குத் தாவியதை அடுத்து பக்கத்தான் ஹரப்பானின் ஆட்சி கவிழந்்தது.
பிரதமர் முகைதீனின் பர்சத்து கட்சியும், அம்னோவும், பாஸ் கட்சியும் கூட்டணி அமைத்து பேராக்கில் ஆட்சியைப் பிடித்துள்ளன.
பர்சத்து கட்சியைச் சேர்ந்த அகமது ஃபைசால் அசுமு பேராக்கின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார். 59 தொகுதிகளைக் கொண்டுள்ள பேராக் சட்டமன்றத்தில் 30 தொகுதிகள் இருந்தால் ஆட்சியை அமைக்கலாம்.
இந்நிலையில், 32 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக திரு ஃபைசால் கூறினார்.

