கத்தி ஏந்திய ஆடவரைச் சுட்டுக்கொன்ற பிரிட்டிஷ் போலிஸ்

கத்தி ஏந்திய ஆடவரைச் சுட்டுக்கொன்ற பிரிட்டிஷ் போலிஸ்

1 mins read

லண்டன்: பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அருகில் கத்திகளை வைத்துக்கொண்டு இருந்தவரை அந்நாட்டு போலிசார் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவம் நேற்று நிகழ்ந்தது.

இது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று போலிசார் தெரிவித்தனர். சந்தேகப்படும்படி நடந்துகொண்டிருந்த அந்த ஆடவரை போலிசார் நெருங்கியபோது அவர் இரண்டு கத்திகளை வெளியே எடுத்தார்.

இதையடுத்து, அந்த ஆடவரை போலிஸ் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டனர். அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.