பிலிப்பீன்சில் அவசரநிலை பிரகடனம்

பிலிப்பீன்சில் அவசரநிலை பிரகடனம்

1 mins read
f6006ee9-653e-4d75-b5ca-73adb991f53f
-

கிருமி பரவல்;

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் அடையாளம் காண முடியாத இடங்களில் கொரோனா கிருமி பரவுவதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான்: 90 வயது ஆடவர் மரணம்

தோக்கியோ: தோக்கியோவில் கிருமியால் பாதிக்கப்பட்ட 90 வயது ஆடவர் காலமானார். இவருடன் சேர்த்து மொத்தம் 16 பேர் கிருமிக்கு பலியாகியுள்ளனர்.

பிரிட்டனில் 3வது நபர் பலி

லண்டன்: பிரிட்டனில் கிருமித் தொற்றுக்கு ஆளான 3வது நபர் உயிரிழந்தார். ஞாயிறு அன்று கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 273க்கு அதிகரித்தது.

சவூதியில் நால்வர் பாதிப்பு

கெய்ரோ: சவூதி அரேபியாவில் கிருமியால் பாதிக்கப்பட்ட நான்கு புதிய சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் கொரோனா கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 15க்கு அதிகரித்துள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சீனாவில் பல தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டன

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகள் பல மூடப்பட்டன. நாடு முழுவதும் 40 புதிய சம்பவங்கள் ஏற்பட்டதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது.