டில்லி: சுதந்திரம் பெற்று தந்த சனானா குஸ்மாவோவின் தலைமையில் ஆறு கட்சிகளைக் கொண்ட கூட்டணி கிழக்குத் தீமோரை ஆட்சி செய்ய தயாராக இருக்கிறது. கிழக்குத் தீமோரின் முதல் அதிபரான 73 வயது திரு குஸ்மாவோ நாடாளுமன்றத்தில் உள்ள 65 தொகுதிகளில் 34 தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதாக கடந்த மாதம் தெரிவித்தார். பிரதமர் தோர் மட்டான் ருவாக்கை ஆதரித்த கூட்டணி கலைந்ததை அடுத்து கிழக்குத் தீமோரில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சனானா குஸ்மாவோ தலைமையிலான கூட்டணி ஆட்சிக்குத் தயார்
1 mins read

