வியட்னாமிய செய்தியாளருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

வியட்னாமிய செய்தியாளருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

1 mins read

ஹனோய்: வியட்னாமின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்து வந்த செய்தியாளருக்கு நில ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த நில ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று வியட்னாமிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளால் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் டுரோங் டய் நாட் தாய்லாந்தில் தலைமறைவானார். இந்நிலையில், கடந்த ஆண்டில் அவர் வியட்னாமில் கைது செய்யப்பட்டார்.