ஆப்கான் முகாம்களிலிருந்து ராணுவத்தை மீட்கும் அமெரிக்கா

ஆப்கான் முகாம்களிலிருந்து ராணுவத்தை மீட்கும் அமெரிக்கா

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களிலிருந்து அமெரிக்கா அதன் வீரர்களை மீட்கத் தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழும்போதும் அமெரிக்கா தனது ராணுவ வீரர்களை மீட்டுக்கொள்ள முடிவெடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆப்கான் அரசாங்கத்துக்கும் தலிபானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று தொடங்க இருந்தது. கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த மாதம் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்கீழ் அடுத்த 14 மாதங்களுக்குள் அனைத்து வெளிநாட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறும். ஆப்கான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அல் காய்தா மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்ளவும் தலிபான் உறுதி அளித்துள்ளது.

கொடுத்த வாக்கை தலிபான் காப்பாற்றினால்தான் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டவை நடைமுறைக்கு வரும்.