தென்கொரியாவில் 131 பேர் பாதிப்பு

தென்கொரியாவில் 131 பேர் பாதிப்பு

1 mins read
c9632526-77a1-4a58-b3a1-11254a8d9eb9
தென்கொரியாவில் உள்ள சோல் நகரின் கிம்போ அனைத்துலக விமான நிலையத்தில் கொரோனா கிருமி தொற்றாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் விமான நிலைய ஊழியர்கள். படம்: ஏஎப்பி, யோன்ஹாப் -

சோல்: கொரோனா கிருமித்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான தென்கொரியாவில் புதிதாக 131 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. கிருமித்தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்தனர். அந்நாட்டில் நாள் ஒன்றுக்கு 150க்கும் குறைவான சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டிருப்பது இரு வாரங்களில் இதுவே முதன்முறை என்று கொரிய தொற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாடு நிலையம் கூறியது. தென்கொரியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,500ஐ கடந்துவிட்டது.