ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கிருமித்தொற்றால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி இன்று மூன்றாவது நாளாக முடக்க நிலையில் உள்ளது.
கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 168 என்று பதிவானதில் தற்போதைய பலி எண்ணிக்கை 631 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டிவிட்டது.
இதனால் கலாசார மற்றும் அரசியல் நிகழ்வுகள் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.
கூட்ட நெரிசலைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வருவதால் விளையாட்டுப் போட்டிகளும் அடிபட்டுப்போகின்றன.
மிகவும் அவசரமான வேலை அல்லது சுகாதாரக் காரணங்கள் இருந்தால் மட்டுமே பயணம் செய்யுமாறு நாட்டின் 60 மில்லியன் மக்களுக்கு இத்தாலிய பிரதமர் கியுஸ்ப் கான்ட் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
பிரபல இடங்களான மிலான், ரோம் ஆகியவற்றில் ஆள் நடமாட்டமே காணப்படாத நிலையில், அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை வாங்கக்கூட மக்கள் வீட்டை விட்டு வெளியே அடியெடுத்து வைக்கத் தயங்குகிறார்கள்.
இந்நிலையில் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து மீள, ஒரே மாதத்தில் நான்காவது முறையாக பிரதமர் கான்ட் இத்தாலியின் நிதி ஆதரவுத் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
#கொவிட்-19 #கொரோனா #இத்தாலி

