பேங்காக்: தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில் உணவக உரிமையாளரான 36 வயது சிங்கப்பூரருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று தாய்லாந்தில் உறுதிசெய்யப்பட்ட ஆறு புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் இவரும் அடங்குவார். தமக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியான உடனே தமது ஹவாயி உணவகத்தின் நிர்வாகிக்குத் தகவல் தெரிவித்துக் கடையை மூடச் சொன்னதுடன் உணவகத்தின் அனைத்து ஊழியர்களும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர் கடைசியாகத் தம் உணவகத்திற்குக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்று அங்கு இரண்டு மணி நேரம் இருந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை அவருக்கு உடம்பு வலியும் மறுநாள் காய்ச்சலும் வந்தது.
தாய்லாந்தில் முதல் சிங்கப்பூரருக்கு பாதிப்பு
1 mins read

