செம்பனை: இந்தியாவுடன் பேச மலேசியா முடிவு

1 mins read
c456f7ea-11be-4689-9e56-533ddaf2ba96
செம்பனை எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவுடன் பேசி ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காண விரும்புவதாக மலேசியா தெரிவித்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

செம்பனை எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவுடன் பேசி ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காண விரும்புவதாக மலேசியா தெரிவித்தது.

இரு நாடுகளுக்கு இடையே உறவை மேம்படுத்தும் விதமாக விரைவில் இந்தியாவுக்கு பேராளர் குழு ஒன்றை அனுப்பி வைக்க விரும்புவதாகவும் மலேசிய அமைச்சர் முஹமது கைருடின் அமான் ரசாலி தெரிவித்தார்.

உலகிலேயே இந்திய பயனீட்டாளர்கள் ஆக அதிக அளவில் சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் இவ்வாண்டு மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செம்பனை எண்ணெய்க்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் மீதான இந்தியாவின் கொள்கைகளை மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் விமர்சித்ததால் இந்தியா பதிலடித் தரும் விதமாக மலேசிய எண்ணெய்க்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்த நிலையில் புதிய பிரத மராக பொறுப்பு ஏற்றுள்ள முகை தீன் தலைமையிலான அமைச்ச ரவை இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறது.