எவரெஸ்ட்டில் ஏற அனுமதியில்லை

எவரெஸ்ட்டில் ஏற அனுமதியில்லை

1 mins read
3758afb7-21a1-4c5c-8ae0-2f3216dcf7f6
பொதுவாக, ஏப்ரல், மே மாதங்களில் அங்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். படம்: ஏஎஃப்பி -

கொரோனா தொற்று காரணமாக உலகின் ஆகப் பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான அனுமதியை நேப்பாளம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

இப்போதைக்கு, நேப்பாளத்தில் எந்த ஒரு மலையிலும் ஏற அனுமதியில்லை.

அத்துடன், சுற்றுலா விசாக்களை வழங்குவதையும் அந்நாடு நிறுத்திவைத்துள்ளது.

எவெரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு அனுமதி அளிப்பதன் மூலம் அந்நாட்டுக்கு ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் வருவாய் கிடைத்து வந்தது.

பொதுவாக, ஏப்ரல், மே மாதங்களில் அங்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதுவரை, நேப்பாளத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா கிருமி தொற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

#கொரோனா #கொவிட்-19 #எவரெஸ்ட் #நேப்பாளம்

குறிப்புச் சொற்கள்
எவரெஸ்ட்கொரோனா