மியன்மார் மீனவர்களை சிறையில் அடைத்தது இந்தோனீசியா

1 mins read
ea04fdda-9d15-4029-9d31-61a6f9bbe476
சிறையில் இருக்கும் மியன்மார் மீனவர்கள். படம்: இபிஏ -

ஜகார்த்தா: மியன்மாரைச் சேர்ந்த ஏறத்தாழ 12 மீனவர்களை இந்தோனீசிய அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

இந்தோனீசியக் கடற்பகுதிக்குள் அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாகப் புகுந்து மீன்பிடித்ததாகவும் இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாட்டு மீனவர்கள் இவ்வாறு செய்வதால் இந்தோனீசிய மீனவர்கள் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தோனீசியக் கடற்பகுதிக்குள் மற்ற நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் பலர் சட்டவிரோதமாகப் புகுந்து மீன்பிடிப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் குறைகூறுகின்றனர்.

இத்தகையோரைத் தடுக்க சரியான தீர்வு காண முடியாமல் இந்தோனீசிய அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

நேற்று கைது செய்யப்பட்ட மியன்மார் மீனவர்கள் பண்டார் ஆச்சேயில் உள்ள கடற்துறை, மீன்வளத்துறை கண்காணிப்பு தலைமை ஆணையத்தின் தலைமையகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.