'மே மாதத்தில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும்'

'மே மாதத்தில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும்'

1 mins read
3807f75c-716b-4af5-acc3-8cfe228da35f
-

கோலாலம்பூர்: வரும் மே மாதத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்று கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுய லாபத்துக்காக எதிர்க் கூட்டணிக்குத் தாவியதாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்ததை திரு அன்வார் ஏற்க மறுத்தார்.

மலேசியாவின் பிரதமராக திரு அன்வார் அவசரப்பட்டதே பக்கத்தான் ஹரப்பானின் ஆட்சி கவிழ காரணமாக இருந்ததாக டாக்டர் மகாதீர் தெரிவித்திருந்தார்.

இதற்கு திரு அன்வார் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

"அடுத்த சில வாரங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எதுவும் சாத்தியம்," என்று 72 வயது திரு அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.