'அம்னோ பெர்சத்துவுக்குக் கீழ் இருக்கும் கட்சியல்ல'

2 mins read
9028a9f0-8fa5-4850-9e3a-95fa5ba4e575
அம்னோ ஓர் அர­சி­யல் கட்சி என்­றும் அது பெர்­சத்து கட்­சிக்­கும் பிர­த­மர் முகை­தீன் யாசி­னுக்­கும் கீழ் செயல்­படும் கட்சி அல்ல என்­றும் அம்­னோ­வின் உத­வித் தலை­வர் முகம்­மது காலித் நோர்­டின் தெரி­வித்­துள்­ளார். படம்: ஹரி அங்காரா -

ஜோகூர் பாரு: அம்னோ ஓர் அர­சி­யல் கட்சி என்­றும் அது பெர்­சத்து கட்­சிக்­கும் பிர­த­மர் முகை­தீன் யாசி­னுக்­கும் கீழ் செயல்­படும் கட்சி அல்ல என்­றும் அம்­னோ­வின் உத­வித் தலை­வர் முகம்­மது காலித் நோர்­டின் தெரி­வித்­துள்­ளார்.

தமது கட்­சி­யி­ன­ருக்­குப் போது­மான அமைச்­சர் பத­வியை திரு முகை­தீன் தர­வில்லை என்று அம்னோ வருத்­தம் தெரி­வித்­த­தற்கு இதுவே கார­ணம் என்­ப­தை முன்­னாள் தலைமை நீதி­பதி அப்­துல் ஹமீது முகம்­மது புரிந்­து­கொள்ள வேண்­டும் என்­றார் அவர்.

நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட வேண்­டும் என்று அம்னோ ஆரம்­பத்­தி­லி­ருந்தே கூறி வரு­வ­தாக முன்­னாள் ஜோகூர் முத­ல­மைச்­ச­ரான திரு காலித் தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­டால் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும்.

"டாக்­டர் மகா­தீர் எடுத்த நட­வ­டிக்­கை­க­ளால் மலே­சிய அர­சி­ய­லில் சர்ச்­சை­கள் அதி­க­ரித்­ததை அடுத்து அம்னோ அதன் நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொண்­டது.

"பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணும் நோக்­கில் நாட்­டின் நல­னுக்­காக அம்­னோ­வும் பாஸ் கட்­சி­யும் திரு முகை­தீ­னு­டன் கூட்­டணி அமைக்க முடி­வெ­டுத்­தது," என்று திரு காலித் தெரி­வித்­தார்.

அம்னோ, பாஸ் ஆகிய கட்­சி­க­ளின் ஆத­ரவு இல்­லா­மல் திரு முகை­தீன் அர­சாங்­கம் அமைத்­தி­ருக்க முடி­யாது என்று திரு காலித் வலி­யு­றுத்­தி­னார். பெரி­க்காத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணியை நிறு­விய கட்­சி­களில் அம்­னோ­வும் ஒன்று என்று அவர் தெரி­வித்­தார்.

"பெர்­சத்து கட்­சியை சேர்ந்த 35 விழுக்­காடு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தேர்­த­லில் அம்னோ வேட்­பா­ளர்­க­ளா­கப் போட்­டி­யிட்டு வென்­ற­வர்­கள். கடந்த தேர்­த­லில் பெர்­சத்து கட்சி வெறும் 13 தொகு­தி­க­ளைக் கைப்­பற்­றி­யது. இதை­ய­டுத்து எஞ்­சி­யி­ருந்­தோர் பத­விக்­காக கட்சி தாவி­னர்.

"அமைச்­ச­ர­வை­யில் போது­மான அம்னோ கட்­சி­யி­னர்­கள் இல்லை என்று நாங்­கள் வருத்­தம் தெரி­வித்­தது பற்றி திரு ஹமீது கவ­லைப்­ப­டத்­தே­வை­யில்லை. மாறாக, புதிய அமைச்­ச­ர­வை­யின் தரம், நம்­ப­கத்­தன்மை ஆகி­யவை பற்றி அவர் கவ­லைப்­பட வேண்­டும்," என்று திரு காலித் தெரி­வித்­தார்.

"திரு அஸ்­மின் அலியை ஆத­ரிக்­கும் பத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அமைச்­சர்­க­ளாக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­கள் மக்­க­ளின் முடி­வுக்கு மதிப்பு கொடுக்­கா­மல் பத­விக்­காக கட்சி மாறி­விட்­ட­னர்.

"அவர்­களில் சிலர் மோச­டி­களில் ஈடு­பட்­டுள்­ள­னர். ஆனால் அவர்­கள் இன்­னும் பாது­காக்­கப்­ப­டு­கின்­ற­னர். புதிய அர­சாங்­கம் நேர்­மை­யா­ன­தாக இருக்­கும் என்று உறுதி அளிக்­கப்­பட்­டும் இத்­த­கை­யோ­ருக்கு அமைச்­சர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்­கத்­தின் நம்­ப­கத்­தன்­மையை பொறுத்தே மரி­யாதை கொடுக்­கப்­படும்," என்று திரு காலித் தெரி­வித்­தார். அர­சி­யல் கட்சி என்ற முறை­யில் நடப்­ப­வற்­றைப் பார்த்­துக்­கொண்டு அம்னோ அமை­தி­யாக இருக்­காது என்­றார் அவர்.