'பெரிக்காத்தான் கூட்டணியில் இணையப்போவதில்லை'

'பெரிக்காத்தான் கூட்டணியில் இணையப்போவதில்லை'

1 mins read
eb2167c8-bb4b-4239-a725-06f08eef61ac
மலாக்­கா­வின் பெரிக்­காத்­தான் மாநில அர­சாங்­கத்­து­டன் இணை­யப்­போ­வ­தில்லை என்று காடெக் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான ஜி.சாமி­நா­தன் கூறி­யுள்­ளார். படம்: மலேசிய ஊடகம் -

மலாக்கா: மலாக்­கா­வின் பெரிக்­காத்­தான் மாநில அர­சாங்­கத்­து­டன் இணை­யப்­போ­வ­தில்லை என்று காடெக் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான ஜி.சாமி­நா­தன் கூறி­யுள்­ளார்.

மலாக்­கா­வின் ஜன­நா­ய­கச் செயல் கட்­சித் தலை­வர் தே கோக் கியூ­வைத் தாம் ஆத­ரிப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

"நான் கட்சி மாறப்­போ­வ­தாக வலம் வரும் செய்­தி­யில் உண்மை ஏதும் இல்லை," என்று திரு சாமி­நா­தன் நேற்று தெரி­வித்­தார்.

மலாக்கா மாநி­லத்­தின் பக்­கத்­தான் ஹரப்­பான் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான பொது­வான வாட்ஸ்­அப் குழு­வி­லி­ருந்து வில­கி­ய­தற்­கான கார­ணத்தை திரு சாமி­நா­தன் தெரி­விக்­க­வில்லை.

அண்­மை­யில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளு­டன் தொடர்பு வைத்­தி­ருப்­ப­தாக திரு சாமி­

நா­தன் மீது குற்­றச்­சாட்டு பதி­வா­கி­யது. ஆனால் அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­கள் கடந்த மாதம் கைவி­டப்­பட்டு அவர் விடு­தலை செய்­யப்­பட்­டார்.

மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பற்­றிய பொய்ச் செய்­தி­கள் பர­வும்­போது அதைப் பற்றி அவர்­கள் உட­ன­டி­யாக தெளி­வு­ப­டுத்த வேண்­டும் என்று மலாக்கா பய­னீட்­டா­ளர், சுற்­றுப்­புற சங்­கத்­தின் தலை­வர் திரு கே.முரளி தெரி­வித்­தார்.