ஈராக் ராணுவ முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல்

ஈராக் ராணுவ முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல்

1 mins read
789707a0-8508-4c67-b090-aa0d0fab5e92
அமெரிக்கத் தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட சேதம். படம்: ஏஎஃப்பி -

பாக்­தாத்: ஈராக்­கின் தாஜி ராணுவ முகாம் மீது நேற்று ஏவு­க­ணைத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது.

அந்த முகா­மில் அமெ­ரிக்­கப் படை­யி­னர் இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த வாரத்­தில் இரண்­டா­வது முறை­யாக இந்த முகாம் தாக்­கப்­பட்­டுள்­ளது.

முகாம் மீது குறைந்­தது 10 ஏவு­க­ணை­கள் பாய்ச்­சப்­பட்­ட­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் முகா­மில் இருந்த ஈராக்­கிய ராணுவ உயர் அதி­காரி தெரி­வித்­தார்.

ஏவு­க­ணைத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­போது முகாம் எங்­கும் எச்­ச­ரிக்கை ஒலி ஒலித்­த­தாக அவர் கூறி­னார். சில நாட்­க­ளுக்கு முன்பு அந்த முகா­மில் இதே போன்ற தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­போது அமெ­ரிக்க, பிரிட்­டிஷ் ராணுவ வீரர்­கள் சிலர் மாண்­ட­னர்.

இந்­தத் தாக்­கு­தலை ஹஷீது அல் ஷாபி போராளி அமைப்பு நடத்­தி­ய­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­தது. தாக்­கு­

த­லுக்­குப் பதி­லடி கொடுக்­கும் வகை­யில் அந்த அமைப்­பின் ஆயு­தக் கிடங்கை அமெ­ரிக்க ஆகா­யப் படை தாக்­கி­யது. ஈரா­னின் ஆத­ர­வு­டன் செயல்­படும் கத்­தைய்ப் ஹிஸ்­புல்லா போராளி அமைப்­பை­யும் அமெ­ரிக்கா குறைகூறு­கிறது. இந்த அமைப்­பைக் குறி­வைத்து அமெ­ரிக்­கப் படை­யி­னர் நேற்று வான்­வ­ழித் தாக்­கு­தல்­களை நடத்­தி­னர். ஆனால் இந்­தத் தாக்­கு­

த­லில் மூன்று ஈராக்­கிய ராணுவ வீரர்­கள், இரண்டு போலிஸ் அதி­கா­ரி­கள் கொல்­லப்­பட்­ட­தாக ஈராக்­கிய அர­சாங்­கம் கூறி­யது. அமெ­ரிக்கா நடத்­திய தாக்­கு­த­லில் போரா­ளி­கள் யாரும் மர­ணம் அடை­ய­வில்லை என்று அது கூறி­யது. அமெ­ரிக்கா நடத்­திய

தாக்­கு­த­லுக்கு ஈராக் கண்­ட­னம் தெரி­வித்­தது.