சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்: பிரெஞ்சு மருத்துவர் மீது குற்றச்சாட்டு

சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்: பிரெஞ்சு மருத்துவர் மீது குற்றச்சாட்டு

1 mins read

பாரிஸ்: சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும் பாலியல் ரீதியில் தாக்கியதற்காகவும் பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

69 வயது லே ஸ்கோவார்னேக் தமது இரண்டு உறவுக்கார சிறுமிகள், பக்கத்து வீட்டு சிறுமி, தம்மிடம் சிகிச்சை பெற்றவர்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சிறுமிகளைப் பாலியல் ரீதியாக தாக்கியதை ஒப்புக்கொண்ட அந்த மருத்துவர், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.