இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரான்ஸ் முடக்கம்

மட்­ரிட்: ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் கொவிட்-19 கிரு­மித் தொற்று பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் இத்­தா­லி­யைத் தொடர்ந்து ஸ்பெ­யி­னும் பிரான்சும் முடக்கப்பட்டுள்ளது.

எனவே இந்­நா­டு­களில் உண­வுப் பொருட்­கள், மருந்­து­கள் வாங்­கு­வ­தற்­கும் வேலைக்கு, மருத்­து­வ­ம­னைக்குச் செல்­வது போன்ற முக்­கிய, அவ­சர தேவை­க­ளைத் தவிர்த்து மக்­கள் வெளியே செல்ல அனு­மதி கிடை­யாது.

ஸ்பெ­யி­னில் அறி­விக்­கப்­பட்­டுள்ள இந்த 15 நாட்­கள் அவ­ச­ர­நிலை பிர­க­ட­னத்­தை­ய­டுத்து மது­பா­னக் கூடங்­கள், உண­வுப் பொருள் விற்­பனை செய்­யாத கடை­களும் மூடப்­பட்­டன.

பொழு­து­போக்கு இடங்­க­ளான திரை­ய­ரங்­கு­கள், நீச்­சல் குளங்­கள், காற்­பந்­துத் திடல்­கள் உள்­ளிட்­ட­வை­யும் மூடப்­பட்­டன. கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் ஸ்பெ­யி­னில் பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன.

மேலும் உள்­நாட்டு போக்­கு­வ­ரத்து திங்­கட்­­கிழமை முதல் குறைக்­கப்­படும் என்­றும் விமா­னம், ரயில், படகு சேவை­க­ள் பாதி­யா­க்­கப்­படும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

இதையடுத்து ஸ்பெ­யி­னில் 47 மில்­லி­யன் மக்­க­ளின் வாழ்க்கை முடக்­கப்­பட்­டுள்­ளது.

நாடு முடக்­கப்­ப­டு­வதை அறி­வித்த ஸ்பெ­யின் பிர­த­மர் பெட்ரோ சான்­செஸ், “நாம் நம் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளை­யும் நண்­பர்­க­ளை­யும் மீண்­டும் சந்­திக்­கும் காலம் மீண்­டும் நிச்­ச­யம் வரும். அந்­நே­ரம் வரும் வரை, நமக்கு இப்­போ­தைக்குத் தேவை­யான சக்­தி­களை நாம் வீணாக்­கக்­கூ­டாது,” என்று கூறி அனை­வ­ரை­யும் வீட்­டி­லேயே இருக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டார்.

இந்த அறி­விப்பு வெளி­யான குறு­கிய நேரத்­தி­லேயே, பிர­த­மர் பெட்ரோ சான்­செ­ஸின் மனைவி பெகோனா கோம்­சுக்­கும் கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்­கம் அறி­வித்­தது.

இத்­தா­லியை அடுத்து கிரு­மித் தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள ஐரோப்­பிய நாடு­களில் ஒன்­றாக உள்­ள ஸ்பெ­யி­னில் நேற்று வரை 6,250 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 193 பேர் பலி­யா­கி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!