கோலாலம்பூர்: தம் மகன் கைது செய்யப்பட்டதாகப் பொய் செய்தி பரப்பிய அம்னோ இளைஞர் தலைவர், தேசிய முன்னணி, அம்னோ மற்றும் பாஸ் ஆதரவாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமது வழக்கறிஞர்களை டிஏபி தலைமை செயலாளரும் மலேசிய முன்னாள் நிதி அமைச்சருமான லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இவர்களுக்கு எதிராக போலிசும் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தனது மகன் சிங்கப்பூருக்கு $2 மில்லியனை எடுத்துச் சென்று அதனை அறிவிக்க தவறியதால் கைது செய்யப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 29ஆம் தேதியன்று தான் சிங்கப்பூருக்குச் சென்றதாகவும் பப்பா அஜ்ரி என்ற பெயரில் அம்னோ இளைஞர் தலைவர் ஒருவர் பொய் செய்தி பரப்பியிருக்கிறார் என்று சொன்னார் லிம் குவான் எங்.

