நெட்டன்யாகு மீதான வழக்கு ஒத்திவைப்பு

நெட்டன்யாகு மீதான வழக்கு ஒத்திவைப்பு

1 mins read
a31b7e97-24c1-42a7-a998-f1e6878c43bd
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மீதான ஊழல் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படம்: இபிஏ -

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மீதான ஊழல் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் பேரம் பேசியதாகவும் நெட்டன்யாகு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் தொடர்பான விசாரணை ஜெருசலேம் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் பெஞ்சமின் நெட்டன்யாகு நாளை முன்னிலையாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், பெஞ்சமின் நெட்டன்யாகு நீதிமன்றத்துக்கு வந்தால் அதிகமான அளவில் ஜெருசலேம் நகரில் மக்கள் கூடுவார்கள் என்ப தால் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத் துறை பொது எச்சரிக்கை அறிவிப்பின்படி, இவ்வழக்கின் அடுத்த விசாரணை மே மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.