துபாய்: ஈரானில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 724ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடைசி 24 மணி நேரத்தில் அங்கு 113 பேர் உயிரிழந்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.
புதிதாகப் பாதிக்கப்பட்ட 1,209 பேரையும் சேர்த்து கிருமித் தொற்றியவர்களின் எண்ணிக்கை 13,938ஆக உயர்ந்துள்ளது.

