சாண்டியாகோ: சொகுசுக் கப்பலில் பயணம் செய்த 85 வயது பிரிட்டன் ஆடவருக்கு கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சில்வர் எக்ஸ்ப்ளோரர் கப்பலில் இருந்த 235 பேரை சிலி தெற்கு துறைமுகமான காலெட்டா டோர்டலில் தனிமைப்
படுத்தியுள்ளது.
அதுபோல், பிரேசில் சொகுசுக் கப்பலில் பயணித்த இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அக்கப்பலில் பயணம் செய்த 609 பேரும் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

