கெய்ரோ: எகிப்தில் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமையன்று 110ஐ எட்டியதையடுத்து, அங்கு பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு வார விடுமுறை அறிவிக்கப்பட்டு
உள்ளது. கிருமித் தொற்று காரணமாக இருவர் பலியாகினர்.
முன்னதாக பொது இடங்களில் பெருமளவிலான கூட்டம் கூடுவது, பிரார்த்தனைக்கான நேரக் கட்டுப்பாடு, உள்ளூர் காற்பந்துப் போட்டிகள் ஆகியன ரத்து செய்யப்பட்டிருந்தன.

