இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் 107 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் 107 ஆக அதிகரிப்பு

2 mins read
7476692e-1d44-4d22-80c4-a285eeb3df50
இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மி­யால்  பாதிக்­கப்­பட்டவர்­க­ளின் எண்­ணிக்கை 107ஐ தொட்­டுள்­ளது. இந்த 107 பேரு­டன் தொடர்­பில் இருந்த 4,000 பேர் தொடர் கண்­கா­ணிப்­பில் இருந்து வரு­வ­தா­க­வும் மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. படம்: ஊடகம் -

புதுடெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்டவர்­க­ளின் எண்­ணிக்கை 107ஐ தொட்­டுள்­ளது. இந்த 107 பேரு­டன் தொடர்­பில் இருந்த 4,000 பேர் தொடர் கண்­கா­ணிப்­பில் இருந்து வரு­வ­தா­க­வும் மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கொரோனா வேக­மா­கப் பரவி வரும் நிலை­யில் இதை பேரி­டர் சூழ­லாக மத்­திய உள்­துறை அமைச்­ச­கம் அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் இந்த கொரோனா கிரு­மி­யைப் பர­வா­மல் கட்­டுப்­ப­டுத்த மத்­திய, மாநில அர­சு­கள் முழு­வீச்­சில் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றன.

கொரோனா தாக்­கு­த­லால் கர்­நா­ட­கா­வில் ஒரு முதி­ய­வ­ரும் டெல்­லி­யில் ஒரு மூதாட்­டி­யும் இறந்த நிலை­யில் இந்­தக் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண் ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் அதிக பட்­ச­மாக 31 பேர் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். கேர­ளா­வில் 22 பேர் இக்­கி­ருமி தாக்­கு­த­லுக்கு ஆளாகி யுள்­ள­னர்.

டெல்­லி­யில் கொரோனா பாதிப்­புக்கு உள்­ளான ஏழு நபர்­கள் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். ஹரி­யா­னா­வில் வெளி­நாட்­டி­னர் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில், அவர்கள் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். தெலுங்­கானா மாநி­லத்­தில் மூவ­ரும் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் வெளி­நாட்­டி­னர் ஒரு­வர் உட்­பட 12 பேரும் லடாக்­கில் மூவ­ரும் கொரோனா பாதிப்­புக்குள் ளாகி சிகிச்சை பெறு­கின்­ற­னர்.

கர்­நா­ட­கா­வில் ஆறு பேருக்­கும் ஆந்­தி­ரா­வில் ஒரு­வ­ருக்­கும் கொரோனா கிருமி இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கொரோனா பாதிப்­புக்­குள்­ளான வெளி­நாட்­டி­னர் 17 பேருக்கு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் டெல்லி மற்­றும் கர்­நா­ட­கா­வில் தலா ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­க­வும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் 107 பேர் கொரோனா பாதிப்­புக்கு உள்­ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலை­யில் 9 பேர் உடல்நலன் தேறி வீடு திரும்பியுள்ளனர்.