புனே: இந்தியாவில் மகாராஷ் டிரா மாநிலத்தில்தான் ஆக அதிகமாக 31 பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூகான் நகரில் தோன்றிய இந்த கொரோனா கிருமியால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,839ஐ நேற்று நெருங்கி இருந்தது.
மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுகின்றன. ஆனால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு, பல்கலைக்கழக தேர்வுகள் முன்பு கூறியபடி நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
கொரோனா கிருமியை தொற்றுநோயாக அறிவித் துள்ளது உத்தரகாண்ட் அரசாங்கம். திரையரங்குகள், கல்லூரிகள் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக வும் மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்து திறந்திருக்கும் என்றும் உத்தரகாண்ட் அமைச்சர் மதன் கெளசிக் அறிவித்துள்ளார்.

