கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக முடங்கியுள்ள மணிலா

1 mins read
ea225614-db80-4eb9-9910-ae4a81d9fa9c
மத்திய பிலிப்பீன்சின் பொரொங்கான் பகுதியிலுள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் ஒரு மீட்டர் தொலைவில் அமர்ந்து பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் மக்கள். படம்: ஏஎஃப்பி -

மணிலா: பிலிப்­பீன்­சின் தலை­ந­க­ரான மணி­லா­வுக்­குள் ஆட்­கள் வரு­வதை நேற்று கட்­டுப்­ப­டுத்­தத் தொடங்­கி­யது அந்­நாட்டு போலிஸ். நாட்­டில் அதி­க­ரித்து வரும் கொரோனா கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைக்­கும் நோக்­கில் ஒரு மாத முடக்க நிலை நேற்­றி­லி­ருந்து ஆரம்­பித்­தது.

மணி­லா­வுக்­குள் செல்­லும் பிர­தான சாலை­களில் அதி­கா­ரி­கள் துப்­பாக்­கி­க­ளு­டன் நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர். பிலிப்­பீன்­சுக்­குள்­ளேயே இயங்கி வரும் உள்­நாட்டு விமா­னப் பய­ணங்­களும் நேற்று ரத்து செய்­யப்­பட்­டன. பெரு­ம­ள­வில் ஏற்­பாடு செய்­யப்­படும் கூட்­டங்­கள் மற்­றும் அனைத்து நிலை­க­ளுக்­கு­மான பள்­ளி­கள் ஆகி­ய­வை­யும் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன. பிலிப்­பீன்­சில் 111 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். எட்டு பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

சீனா, இத்­தாலி நாடு­களில் காணப்­பெ­றும் அளவு கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை பிலிப்­பீன்­சில் இல்­லா­விட்­டா­லும் கடந்த சில நாட்­களில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அங்கு இரட்­டிப்­பா­கி­விட்­டன. மணி­லா­வின் மக்­கள் தொகை மட்­டுமே 12 மில்­லி­ய­னாக உள்­ளது.

இதற்­கி­டையே இந்த அதி­ரடி நட­வ­டிக்­கை­கள் சற்று காலந்­தாழ்த்து வந்­துள்­ள­தாக பொது சுகா­தார நிபு­ணர்­கள் அதி­பர் ரொடி­ரிகோ டுடெர்­டெ­யைச் சாடி­னர்.

மணி­லா­வில் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள முடக்க நிலை முழு­மை­யாக இல்­லா­மல் சில விதி­வி­லக்­கு­கள் உள்­ளன. மக்­கள் தொடர்ந்து வேலைக்­குச் செல்­ல­லாம். ஆனால் அவர்­கள் சோத­னைச் சாவ­டி­கள் வழி செல்­ல­வேண்­டும். பேருந்­து­களும் ரயில்­களும் மணி­லா­வின் எல்­லைப் பகு­தி­க­ளுக்­குள் இயங்­கும். பய­ணி­கள் ஓர் இருக்கை தள்­ளியே அமர்ந்­திட வேண்­டும் என்ற கட்­டுப்­பா­டும் உள்­ளது.