புத்ரஜெயா: கொரோனா கிருமித்தொற்றால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் இருக்கும் மலேசியர்களைத் திரும்பக் கொண்டு வர எண்ணியுள்ளது மலேசியா. அவ்வாறு ஈரானில் 65 பேரும் இத்தாலியில் 323 பேரும் உள்ளனர். உணவு, தண்ணீர், ஆடைகள் என அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதற்கான பணிகள் நடைபெறு வதாகவும் கூறப்பட்டது. ஈரான், இத்தாலி நாடுகளில் உள்ள மலேசியர்களை மீண்டும் மலேசியாவுக்குக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் கூறியிருந்தார். பாதிக்கப்பட்ட இரு நாடுகளிலும் மரண எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஈரானில் கிருமி தொற்றிய 12,729 பேரில் 611 பேர் உயிரிழந்துவிட்டனர். இத்தாலியில் பதிவான 17,660 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 1,266 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மலேசியர்களைத் தாயகம் கொண்டுவரத் திட்டம்
1 mins read
ஏமனின் சானா நகரத்தில் உள்ள கோரோனா கிருமி தடுப்பு மையம். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

