தாய்லாந்தில் ஒரே நாளில் 32 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

தாய்லாந்தில் ஒரே நாளில் 32 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

1 mins read
4e70f791-b922-41c5-acc1-6f05d32faae4
தாய்லாந்தின் பேங்காக் நகரில் உள்ள ரச்சபிரசோங் கடைத்தொகுதி வட்டாரத்தில் முகக்கவசத்துடன் செல்லும் மக்கள். படம்: ஏஎப்பி -

பேங்காக்: தாய்லாந்தில் 32 புதிய கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் நேற்று பதிவாகின. ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட ஆக அதிக எண்ணிக்கை இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த 32 பேரில் ஒன்பது பேர் இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி ஒன்றில் கலந்துகொண்டவர்கள். பேங்காக்கின் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் வேலை செய்யும் மூன்று குடிநுழைவு அதிகாரிகளுக்கும் கிருமித் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது தாய்லாந்தில்

114 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருவர் உயிரிழந்துவிட்டார்.